/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம் எம்.ஜி.எம்., ஹெல்த் கேரில் மறுவாழ்வு
/
சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம் எம்.ஜி.எம்., ஹெல்த் கேரில் மறுவாழ்வு
சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம் எம்.ஜி.எம்., ஹெல்த் கேரில் மறுவாழ்வு
சிறுவனுக்கு வலது புறத்தில் இதயம் எம்.ஜி.எம்., ஹெல்த் கேரில் மறுவாழ்வு
ADDED : ஏப் 23, 2025 12:17 AM
சென்னை, மார்பின் இடது புறத்திற்கு பதிலாக, வலது புறத்தில் இதயம் இருந்த சிறுவனுக்கு, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் நவீன் டேவிட்சன் கூறியதாவது:
மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புடன், ஆறு வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனையில், இடது புறத்திற்கு பதிலாக, வலது புறத்தில் இதயம் இருந்தது கண்டறியப்பட்டது.
இதய இடது கீழறையில் ரத்தம் வெளியேறும் பாதையில் அடைப்பு இருந்ததால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செல்லாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் இருந்தான்.
இயற்கையான இதய வால்வுகளை மாற்றாமல், இடது கீழறை அடைப்பை சரி செய்யும் அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. அதன்படி, இதயம், நுரையீரலுக்கு ரத்த ஓட்டம், நவீன கருவிகள் வாயிலாக தொடர்ந்து இயக்கப்பட்டது.
மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையில், அடைப்பை ஏற்படுத்திய திசு அகற்றப்பட்டது. மேலும், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் செல்லும் பாதை குறுகியதாக இருந்ததால், இதயத்தின் வலது பக்கத்தில் கூடுதல் பாதை உருவாக்கப்பட்டது.
தொடர் கண்காணிப்புக்கு பின், சிறுவன் இயல்பு நிலைக்கு திரும்பி, தற்போது நலமுடன் உள்ளான்.
இவ்வாறு அவர் கூறினார்.

