/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு ரூ.31 கோடியில் பணிகள் துவக்கம்
/
பகிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு ரூ.31 கோடியில் பணிகள் துவக்கம்
பகிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு ரூ.31 கோடியில் பணிகள் துவக்கம்
பகிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு ரூ.31 கோடியில் பணிகள் துவக்கம்
ADDED : ஆக 14, 2025 11:48 PM
சென்னை :பகிங்ஹாம் கால்வாயில், 7.3 கி.மீ., சீரமைப்பு பணியை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
சென்னை சிவானந்தா சாலை லாக்நகர் முதல் ராஜா அண்ணாமலைபுரம் வரையிலான, 7.3 கி.மீ., பகிங்ஹாம் கால்வாயை, 31 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளது.
இந்த பணியை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., தயாநிதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய பகிங்ஹாம் கால்வாய் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, நந்தனம், மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வடியும் வெள்ள நீர் கால்வாயகவும், கூவம், அடையாறு நதிகள் வாயிலாக வெள்ள நீரை கடலுக்கு செலுத்தும் கால்வாயாகவும் உள்ளது.
தற்போது, பகிங்ஹாம் கால்வாயில் நீர்தேக்க திறனை அதிகப்படுத்தும் வகையில், 1 மீட்டர் ஆழத்திற்கு அதிநவீன துார்வாரும் இயந்திரங்கள் உதவியுடன் துார்வாரப்பட உள்ளது.
இதன் வாயிலாக கால்வாயில் வெள்ள நீர் கடத்தும் திறன் வினாடிக்கு, 2,500 கன அடியாக உயரும். கால்வாயின் இரு கரைகளையும் பலப்படுத்தி, மரக்கன்றுகள் மற்றும் நடைபாதை அமைப்பதோடு, நான்கு இடங்களில் சிறுவர் பூங்காக்களும் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***