/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடும்பத்துடன் வியாபாரி தற்கொலை முயற்சி
/
குடும்பத்துடன் வியாபாரி தற்கொலை முயற்சி
ADDED : அக் 28, 2025 12:54 AM
சென்னை: இறைச்சி வியாபாரி குடும்பத்துடன் தற்கொலைக்கு மு யன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரஹமதுல்லா, 40; இறைச்சி வியாபாரி. அவரது மனைவி முபினா. இவர்களுக்கு, இரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
ரஹமத்துல்லா, அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வீடு குத்தகைக்காக, 3.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற பெண், வீட்டை குத்தகைக்கு விடாமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த வியாபாரி ரஹமத்துல்லா, வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் நேற்று சென்றார்.
அங்குள்ள மூன்றாவது நுழைவாயில் அருகே, குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி, தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை போலீசார் தடுத்து மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவத்தால் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

