/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுகாதார ஆய்வாளர் இல்லாததால் பிறப்பு பதிவேற்றத்தில் சிக்கல்
/
சுகாதார ஆய்வாளர் இல்லாததால் பிறப்பு பதிவேற்றத்தில் சிக்கல்
சுகாதார ஆய்வாளர் இல்லாததால் பிறப்பு பதிவேற்றத்தில் சிக்கல்
சுகாதார ஆய்வாளர் இல்லாததால் பிறப்பு பதிவேற்றத்தில் சிக்கல்
ADDED : அக் 28, 2025 12:55 AM
கிண்டி: கிண்டி, 168வது வார்டில், சுகாதார ஆய்வாளர் இல்லாததால், பிறப்பு, இறப்பு பதிவேற்றம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டியில் அரசு பல்நோக்கு, முதியோர் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன.
இதனால், இதர வார்டுகளை விட, இந்த வார்டில் பிறப்பு, இறப்பு பதிவுகள் அதிகம். இதை, வார்டு சுகாதார ஆய்வாளர், உரிய ஆவணங்களை பரிசீலித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த வார்டில் உள்ள சுகாதார ஆய்வாளர், ஆறு மாதம் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.
இதனால், பிறப்பு, இறப்பு பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
சிக்கலை தீர்க்க, உடனே சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.