/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடகிழக்கு பருவமழைக்கு முன் படகு வாங்கி கொள்ளுங்கள் அம்பத்துாரில் அன்புமணி கிண்டல்

ADDED : ஜூலை 29, 2025 02:19 AM

அம்பத்துார்,
'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்கிற பெயரில் அன்புமணி, 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில், முன்றாவது நாளான நேற்று, அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மி., துாரம், நடைபயணம் மேற்கொண்டார். இதில், வழக்கறிஞர் பாலு, சேகர் உட்பட 400க்கும் மேற்பட்ட பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின், அன்புமணி பேசியதாவது:
சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்; பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பில்லை. இதற்கு காரணம் தி.மு.க.,வும், முதல்வர் ஸ்டாலினும் தான்.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கோழை தி.மு.க.,விற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தைரியமில்லை. இது ஜாதி பிரச்னை இல்லை. வேலைவாய்ப்பு, படிப்பு, சுயமரியாதைக்கான பிரச்னை.
சென்னைவாசிகளே, மூன்று மாதங்களில் வடகிழக்கு பருவமழை வந்துவிடும். அதற்கு முன், வீடு, கார், பைக் உள்ளிட்டவற்றை பாதுகாத்து கொள்ளுங்கள். நல்ல படகு ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.
யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற எண்ணம் உங்களுக்குள் ஆழமாக வரவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.