/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
200 மீட்டர் சர்வீஸ் சாலை அமைத்தால் 15 கி.மீ., பயணத்தை தவிர்கலாம்
/
200 மீட்டர் சர்வீஸ் சாலை அமைத்தால் 15 கி.மீ., பயணத்தை தவிர்கலாம்
200 மீட்டர் சர்வீஸ் சாலை அமைத்தால் 15 கி.மீ., பயணத்தை தவிர்கலாம்
200 மீட்டர் சர்வீஸ் சாலை அமைத்தால் 15 கி.மீ., பயணத்தை தவிர்கலாம்
ADDED : மார் 04, 2024 01:05 AM

குன்றத்துார்:தாம்பரம்--மதுரவாயல் பை-பாஸ் சாலையையொட்டி சர்வீஸ் சாலை உள்ளது. இந்த வழியே ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், குன்றத்துார் அருகே தரப்பாக்கம் முதல் அனகாப்புத்துார் வரை அடையாறு கால்வாய் குறுக்கே சுமார் 200 மீட்டர் துாரத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கவில்லை.
இதனால், தாம்பரத்தில் இருந்து சர்வீஸ் சாலையில் வரும் வாகனங்கள் அனகாபுத்துாரில் இருந்து குன்றத்துார் சென்று அங்கிருந்து போரூர் நெடுஞ்சாலை வழியே கோவூரில் சர்வீஸ் சாலையை பிடிக்க வேண்டியுள்ளது.
இதனால், கூடுதலாக 15 கி.மீ., சுற்றிக்கொண்டு வாகனங்கள் செல்வதால் நேரமும் ஏரிப்பொருளும் விரயமாகிறது. மேலும், குன்றத்துாரில் நெரிசலும் ஏற்படுகிறது.அடையாறு கால்வாய் குறுக்கே மேம்பாலம் அமைத்து சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.