/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்டப்பணி ஆணையக்குழு பணிக்கு அழைப்பு
/
சட்டப்பணி ஆணையக்குழு பணிக்கு அழைப்பு
ADDED : ஜூலை 10, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவில், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு பிரிவில், தொகுப்பூதியத்தில் பணிபுரிய விருப்பமுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒரு தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர், மூன்று துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர், ஆறு உதவி ஆலோசகர், மூன்று சட்ட அலுவலக உதவியாளர் மற்றும் எழுத்தாளர்கள், வரவேற்பாளர், மூன்று அலுவலக உதவியாளர் உள்ளிட்ட, 17 பணியிடங்கள் உள்ளன.
இதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம் 28ம் தேதி மாலைக்குள் பதிவு தபால் வாயிலாக அனுப்பலாம். விபரங்களுக்கு, https://chennai.dcourts.gov.in/ என்ற இணையதளத்தை நாடலாம்.