UPDATED : நவ 16, 2026 04:26 PM
ADDED : நவ 16, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
சென்னை: மயிலாப்பூரில் நடக்க உள்ள மாநில ஜூனியர் வாலிபால் போட்டியில் பங்கேற்க, பள்ளி அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகர் லயன்ஸ் கிளப் மற்றும் சாந்தோம் பள்ளி இணைந்து, மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டியை, வரும் 21, 22ம் தேதிகளில் பள்ளி வளாகத்தில் நடத்துகின்றன. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான இப்போட்டியில், இருபாலர் அணிகளும் பங்கேற்கலாம். மாணவரில் 24 அணிகளும், மாணவியரில் 20 அணிகளும் அனுமதிக்கப்பட உள்ளது. மொத்தம் 78 போட்டிகள் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்க விரும்பு பள்ளி அணிகள், வரும் 19ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 99623 97171 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
