/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உதவி மையத்தில் பணியிடம் பெண்களுக்கு அழைப்பு
/
உதவி மையத்தில் பணியிடம் பெண்களுக்கு அழைப்பு
ADDED : மார் 05, 2024 12:25 AM
சென்னை,
பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை செயல்படுத்தி வருகிறது.
இங்கு பாதுகாப்பு, சட்டம் மற்றும் உதவி, ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
தென்சென்னை மையத்தில், ஒப்பந்த அடிப்படையில், மூன்று வழக்குப் பணியாளர்கள், இரண்டு பன்முக உதவியாளர் மற்றும் ஒரு பாதுகாவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பங்கள், https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பணியிடங்களுக்கு சேர விருப்பமுள்ளவர்கள்,வரும் 13ம் தேதிக்குள் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேரடியாகவோ, chndswosouth@gmail.com என்ற இ - மெயில் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

