/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எல்லையோர சோதனை சாவடியில் கேமரா பொருத்தம்
/
எல்லையோர சோதனை சாவடியில் கேமரா பொருத்தம்
ADDED : பிப் 20, 2024 12:51 AM

கும்மிடிப்பூண்டி, சென்னை - -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.
ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள அந்த சோதனைச்சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று நடந்தது.
ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை கண்காணிப்பதற்காக, வாகனங்கள் கடக்கும் வழி தடங்களில், நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதை முன்னிட்டு, எல்லையோர சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தவே, கேமராக்கள் பொருத்தப்பட்டதாக ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், நெல்லுார் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில், பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
சில நாட்களில் பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன.
இதையடுத்து, ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள எளாவூர் சோதனைச்சாவடியில் இரு நாட்களாக, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், பறவை காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு கால்நடை மருத்துவர், ஆய்வாளர், உதவியாளர் என மூவர் குழு சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.
ஆனால், வழங்கப்பட்ட இரண்டு கருவிகளில் ஒன்றான தானியங்கி கருவி பழுதாகி உள்ளது.
தோள்பட்டையில் மாட்டிக்கொள்ளும் மற்றொரு கருவி வைத்து மருந்து அடிக்க, ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

