/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நான் நிற்கும் இடத்தில் அண்ணாமலை, ஸ்டாலின், பழனிச்சாமி நிற்க முடியுமா ? - சீமான
/
நான் நிற்கும் இடத்தில் அண்ணாமலை, ஸ்டாலின், பழனிச்சாமி நிற்க முடியுமா ? - சீமான
நான் நிற்கும் இடத்தில் அண்ணாமலை, ஸ்டாலின், பழனிச்சாமி நிற்க முடியுமா ? - சீமான
நான் நிற்கும் இடத்தில் அண்ணாமலை, ஸ்டாலின், பழனிச்சாமி நிற்க முடியுமா ? - சீமான
ADDED : மார் 04, 2024 01:15 AM
போரூர்: நான் நிற்கும் இடத்தில் அண்ணாமலை, ஸ்டாலின், பழனிச்சாமி நிற்க முடியுமா என, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து விடுதலையாகி மருத்துவமனையில் உயிரிழந்த சாந்தன் நினைவேந்தல் நிகழ்வில் சீமான் பேசினார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாந்தன் உருவ படத்தற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
எனது சின்னத்தை வட மாநிலத்தில் ஒரு கட்சிக்கு கொடுத்து இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், பா.ஜ.,வில் இருந்து பிரிந்து சென்ற கட்சிக்கு கொடுத்துள்ளனர்.
சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி என நான் ஆறு தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். ஏழு விழுக்காடு வாக்கு வாங்கி உள்ளது. அங்கீகாரம் பெறுவதற்குள் குரல் வலையை ஏன் நெரிக்கிறார்கள். இன்னும் தேர்தலே வரவில்லை அதற்குள் ஏன், கடிதத்தில் உள்ள கட்சிக்கு எங்கள் சின்னம் ஒதுக்க வேண்டும்.
பா.ஜா., வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். நாட்டின் தேசிய மலரை ஒரு அரசியல் கட்சி எப்படி சின்னமாக அளிக்க முடியும். தேர்தல் முடிந்தவுடன் வழக்கு தொடர்வேன் பதில் கூற வேண்டும்.
அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் பா.ஜ., ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன் உருவானவை. எனது கட்சியை நானாகவே உருவாக்கியது. மற்ற கட்சிகள் கூட்டணி தேடி அலைவது போல் நான் போகவில்லை.
தமிழகத்தில் ஒரே கட்சி பெரிய கட்சி நான் தான். நான் 40 மற்றும் 234 தொகுதியிலும் போட்டியிடுகிறேன். மக்களை சந்திக்கு எந்த கட்சிக்கும் துணிவு இல்லை.
நோட்டு பேரம் சீட்டு பேரம் என, யார் எங்கு செல்கிறார்கள் என, தெரியவில்லை. தனித்து போட்டியிட யாருக்கு துணிவில்லை.
சீமான் நிற்கும் இடத்தில் அண்ணாமலை, ஸ்டாலின், பழனிச்சாமி நிற்க முடியுமா.
என் கட்சியில் எங்கு யார் நிற்க வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன்; ஏனென்றால் இது எனது கட்சி. சீப்பை உடைத்தால் திருமணம் நின்று விடுமா. விவசாயி எனது சின்னத்தில் இல்லை; எனது எண்ணத்தில் உள்ளது.
இந்த அநீதியை இனி தேர்தல் ஆணையம் செய்ய கூடாது. அதற்காக நான் போராடுவேன். தேர்தலில் வர முடியாது என்பதால் தமிழகத்திற்கு மோடி சும்மா வந்து வந்து செல்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.

