/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் பற்றி எரிந்த கார் குன்றத்துார் அருகே பரபரப்பு
/
சாலையில் பற்றி எரிந்த கார் குன்றத்துார் அருகே பரபரப்பு
சாலையில் பற்றி எரிந்த கார் குன்றத்துார் அருகே பரபரப்பு
சாலையில் பற்றி எரிந்த கார் குன்றத்துார் அருகே பரபரப்பு
ADDED : ஜன 10, 2025 12:24 AM

குன்றத்துார், தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்துார் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ்குமார், 37; மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி டாக்டர்.
நேற்று காலை, வழக்கம் போல் வீட்டில் இருந்து, தன் 'ஸ்கோடா' காரில் பணிக்கு புறப்பட்டார். வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை யில், குன்றத்துார் அருகே உள்ள திருமுடிவாக்கம் பகுதியை கடந்தபோது, காரின் முன்புறத்தில் திடீரென புகை வந்தது.
இதனால், காரை சாலையோரம் நிறுத்தி, கீழே இறங்கிய போது, கார் தீப்பற்றி, முழுதும் எரிந்து நாசமானது. அதேபோல், மதுரையைச் சேர்ந்தவர்பாண்டியன், 29. சென்னையில் கால் டாக்சி ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சவாரியை இறக்கிவிட்டு, அம்பத்துார் தொழிற்பேட்டை, வாவின் சிக்னல் அருகே தன் 'டொயோட்டா இதியோஸ்' காரை நிறுத்தி, டீ குடிக்க சென்றுள்ளார்.
அப்போது, காரில் இருந்து திடீரென புகை கிளம்பி, தீப்பிடித்து எரிந்தது. அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.