/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் தவறாக நடந்த டாக்டர் மீது வழக்கு பதிவு
/
பெண்ணிடம் தவறாக நடந்த டாக்டர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 11, 2025 12:14 AM
ஆதம்பாக்கம்: ஒக்கியம்பாக்கத்தை சேர்ந்த, 20 வயது பெண், தன் தாயுடன், ஆதம்பாக்கம், ஆபீசர் காலனியை சேர்ந்த முரளி என்பவரை அவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை சந்தித்து, 30,000 ரூபாய் கடன் கேட்டார்.
அங்கு முரளியின் நண்பரான, எலும்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணரான தியாகராஜபாண்டியன் வந்தார். பெண்ணின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்ற நிலையில், தியாகராஜன் திடீரென கதவை மூடி, அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த அந்த பெண், தாயுடன் காவல் நிலையம் சென்று, தனக்கு நடந்தது குறித்து புகார் அளித்தார். இது குறித்து, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள தியாகராஜபாண்டியனை தேடி வருகின்றனர்.