தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பூனையை கொன்று மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்

பூனையை கொன்று மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்

பூனையை கொன்று மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்


ADDED : செப் 30, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பூந்தமல்லி: பூந்தமல்லி, அம்மான் நகரைச் சேர்ந்தவர் அருண், 34. ஜிம் பயிற்சியாளரான இவர், பூனை, கோழி உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்த்து வருகிறார்.

இவரது வீட்டு பூனை, நேற்று காலை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், வீட்டின் பின்புறம் நாய்கள் ஓயாமல் குரைத்தன.

அங்கு சென்று பார்த்தபோது, பூனையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று, ஒரு மரத்தில் தொங்கவிட்டதை பார்த்து அருண் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அருணுக்கும், பக்கத்து வீட்டில் வசிப்போருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக பூனை கொல்லப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us