UPDATED : நவ 02, 2026 06:51 PM
ADDED : நவ 02, 2026 06:46 PM

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடையிலான, தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில், சென்னை மாணவியர் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடையே, தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி, கடந்த அக்., 26 முதல் 31ம் தேதி வரை, மஹாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள எஸ்.என்.பி.பி., சர்வதேச பள்ளி வளாகத்தில் நடந்தது.
நாடு முழுதும் இருந்து 180க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இதில், பெண்களுக்கான 17 வயது பிரிவில், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஷ்ரத்தா சில்ரன்ஸ் அகாடமியைச் சேர்ந்த யாழினி, காருணிகா, யாதுரி ஆகியோர், குழு போட்டியில் பங்கேற்று, மூன்றாம் இடம் பிடித்து, சாதனை படைத்தனர்.
