/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.பி.எஸ்.இ., தேசிய கால்பந்து ஹிமாச்சல் பள்ளி 'சாம்பியன்'
/
சி.பி.எஸ்.இ., தேசிய கால்பந்து ஹிமாச்சல் பள்ளி 'சாம்பியன்'
சி.பி.எஸ்.இ., தேசிய கால்பந்து ஹிமாச்சல் பள்ளி 'சாம்பியன்'
சி.பி.எஸ்.இ., தேசிய கால்பந்து ஹிமாச்சல் பள்ளி 'சாம்பியன்'
ADDED : அக் 11, 2024 12:17 AM

சென்னை, இந்திய கால்பந்து சங்கம் ஆதரவுடன், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடையேயான, மாணவியர் தேசிய கால்பந்து போட்டி, கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே., பள்ளி மைதானத்தில், கடந்த வாரம் துவங்கி நேற்று முன்தினம் முடிந்தது.
இதில் நாடு முழுதும் இருந்து, 30க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன.
19 வயது பிரிவிற்க்கான போட்டியில், ஹிமாச்சல பிரதேசத்தின் பிங்க்ரோ, குஜராத்தின் நவரச்சனா, நொய்டாவின் ஸ்டெப் பை ஸ்டெப் மற்றும் டெல்லியின் மாடர்ன் ஆகிய நான்கு பள்ளி அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின. குஜராத், டெல்லி அணிகள் அரையிறுதியில் தோற்றன.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ஹிமாச்சல பிரதேசத்தின் பிங்க்ரோ பள்ளி வீராங்கனையர், 1--0 என்ற கோல் கணக்கில் நொய்டாவின் ஸ்டெப் பை ஸ்டெப் பள்ளி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.
14 வயது பிரிவில் மஹாராஷ்டிராவின் சி.எம்.இன்டர்நேஷனல் பள்ளியும், 17 வயது பிரிவில் கோவாவின் தி கிங்ஸ் பள்ளியும் முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றன.