/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாம்பியன் ஆப் சாம்பியன் கிரிக்கெட் சேஷாத்ரி எம்.சி.சி., அணி முதலிடம்

ADDED : ஜூன் 02, 2025 02:53 AM

சென்னை:திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், கோபு நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், ஆவடியில் நடந்தன.
போட்டியில், மாவட்டத்திற்கு உட்பட்ட, பல்வேறு டிவிஷன் பிரிவுகளில் வெற்றி பெற்ற எட்டு அணிகள் மோதின. இதில், நேரடியாக காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மட்டுமே நடந்தன.
நேற்று காலை பட்டாபிராம் இந்து கல்லுாரியில் நடந்த இறுதிப் போட்டியில், ஸ்டாண்டர்ட் அம்பத்துார் மற்றும் சேஷாத்ரி எம்.சி.சி., அணிகள் எதிர்கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த சேஷாத்ரி அணி, 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 188 ரன்களை அடித்தது.
அணியின் வீரர் எம்.தினேஷ் வேதாகுரு, 47 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஒன்பது சிக்சர் என, மொத்தம் 104 ரன்களை அடித்து அசத்தினார்.
அடுத்து பேட்டிங் செய்த ஸ்டாண்டர்ட் அம்பத்துார் அணி, 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி, ஏழு விக்கெட் இழப்புக்கு, 135 ரன்கள் அடித்தது.
இதனால், 53 ரன்கள் வித்தியாசத்தில், சேஷாத்ரி எம்.சி.சி., அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.