சார்மினார் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
சார்மினார் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கம்
ADDED : நவ 21, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஹைதராபாத் – சென்னை இடையே இயக்கப்படும் சார்மினார் விரைவு ரயில், நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் – சென்னை இடையே, சார்மினார் விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ரயில் தற்காலிகமாக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, விரைவு ரயில்கள் இயக்கப்படும் நடைமேடைகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து, சார்மினார் விரைவு ரயில், நாளை முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
