/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேம்ப் ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமையுமா? : வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
/
கேம்ப் ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமையுமா? : வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கேம்ப் ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமையுமா? : வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
கேம்ப் ரோடு சந்திப்பில் மேம்பாலம் அமையுமா? : வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 09, 2011 12:24 AM
வேளச்சேரி சாலையில், கேம்ப் ரோடு சந்திப்பில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும்.
தாம்பரம் - வேளச்சேரி சாலையில், தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கிழக்கு தாம்பரத்திலிருந்து, இச்சாலை வழியாக, சென்னையின் பல இடங்களுக்கு, மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், 24 மணி நேரமும், போக்குவரத்து காணப்படும். இச்சாலையில், கேம்ப் ரோடு ஜங்ஷனில் இருந்து, அகரம் தென் சாலை செல்கிறது. வேளச்சேரி, கேளம்பாக்கம் சாலைகளை இணைக்கும் அகரம் தென் சாலையை ஒட்டி, கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன.
இப்பகுதி மக்கள், கேம்ப்ரோடு ஜங்ஷன் வந்து, அங்கிருந்து, வேளச்சேரி சாலை வழியாக, கிழக்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். ஏராளமான வாகனங்களும், இந்த ஜங்ஷனை பயன்படுத்துகின்றன. போக்குவரத்து போலீசார் பணியிலிருந்தும், சில நேரங்களில், நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு, மேம்பாலம் கட்ட வேண்டும் என்று, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். தற்போது, புறநகரில், பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், கேம்ப்ரோடு ஜங்ஷனிலும் ஒரு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, பெயர்கூற விரும்பாத, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கேம்ப்ரோடு ஜங்ஷனில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், தற்போதைக்கு, மேம்பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை' என்றார்.
-கே.ஆறுமுகம்-

