/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய கால்பந்து போட்டி சென்னை எப்.சி., ஏமாற்றம்
/
தேசிய கால்பந்து போட்டி சென்னை எப்.சி., ஏமாற்றம்
ADDED : அக் 27, 2025 02:56 AM

சென்னை: கோவாவில்நடைபெற்று வரும் சூப்பர் கப் கால்பந்து போட்டியில், சென்னை எப்.சி., அணி முதல் போட்டியில், தோல்வியை தழுவியது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவில் ஆடவருக்கான ஏ.ஐ.எப்.எப். சூப்பர் கப் கால்பந்து போட்டி, கோவாவில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை எப்.சி., உட்பட நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் பங்கேற்று, நான்கு குழுக்களாகப் பிரிந்து விளையாடி வருகின்றன.
இதன் முதல் போட்டியில், சென்னை எப்.சி. அணி, மோகன் பகான் அணியுடன் மோதியது.
இதில் அசத்தலாக விளையாடிய மோகன் பகான் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், சென்னை எப்.சி., அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

