ADDED : அக் 31, 2025 01:28 AM
சென்னை:  ஹைதராபாதில் நடக்கவிருந்த, இந்திய கேம் டெவலப்பர் கான்பரன்ஸ் மாநாடு, சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில், வரும் டிசம்பர் 5 முதல் 7 வரை இந்த மாநடு நடக்க உள்ளது.
நாஸ்காம் ஆதரவுடன் 2008ல் துவங்கிய இந்த மாநாடு, இந்திய டிஜிட்டல் கேமிங் துறையை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும், உலகின் முன்னணி கேம் வடிவமைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு, 150க்கும் மேற்பட்ட அமர்வுகள், கதைசொல்லல், வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த விவாதங்களுடன், இந்த மாநாடு நடைபெற உள்ளது.
இந்தியாவில், 55 கோடிக்கும் மேற்பட்ட கேமர்கள் இருப்பதோடு, ஆண்டிற்கு 28 சதவீத வளர்ச்சியுடன், கேமிங் துறை வேகமாக முன்னேறி வருகிறது.
இது கு றித்து, இந்திய கேம் டெவலப்பர் சங்க தலைவர் ஸ்ரீதர் முப்பிடி கூறுகையில், “சென்னை, இந்திய கேமிங் வளர்ச்சியின் அடுத்த மைல்கல். வலுவான தொழில்நுட்ப வசதி, திறமையான இளைஞர்கள், அரசின் உறுதியான ஆதரவு ஆகியவை, சென்னையை உலகளாவிய கேமிங் மையமாக மாற்றும்,” என்றார். மேலும் விபரங்களுக்கு, www.indiagdc.com என்ற இணையதளத்தை அணுகலாம்.

