sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சென்னை - கொல்கட்டா நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு.. முட்டுக்கட்டை அரசு துறைகள் ஒத்துழைக்காததால் திணறும் ஆணையம்

/

சென்னை - கொல்கட்டா நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு.. முட்டுக்கட்டை அரசு துறைகள் ஒத்துழைக்காததால் திணறும் ஆணையம்

சென்னை - கொல்கட்டா நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு.. முட்டுக்கட்டை அரசு துறைகள் ஒத்துழைக்காததால் திணறும் ஆணையம்

சென்னை - கொல்கட்டா நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு.. முட்டுக்கட்டை அரசு துறைகள் ஒத்துழைக்காததால் திணறும் ஆணையம்


ADDED : நவ 07, 2025 12:10 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள், 20 ஆண்டு இழுபறிக்குப் பின் துவங்கியுள்ள நிலையில், மின் வாரியம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளும் ஒத்துழைக்க மறுப்பதால், பணிகளை தொடர முடியாமல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திணறி வருகிறது. சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, மாதவரம் ரவுண்டானா - நல்லுார் இடையிலான, 11 கி.மீ., சாலை உள்ளது. மாதவரம் ரவுண்டானா முதல் தடா வரை, 54 கி.மீ.,க்கு சாலையை ஆறுவழியாக விரிவாக்கம் செய்ய, 2006ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.

இதற்கான பணிகள், நல்லுார் சுங்கச்சாவடி முதல் தடா வரை நீண்ட இழுபறிக்கு பின் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாதவரம் ரவுண்டானா முதல் நல்லுார் சுங்கச்சாவடி வரையிலான சாலை, 20 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது.

நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு கிடைக்காததால், பணிகள் முடங்கின. இதையடுத்து, உயர்மட்ட மேம்பால சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்கு, 1,400 கோடி ரூபாய் தேவைப்படும் என, விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிதி ஒதுக்கவில்லை.

அரைகுறை இந்நிலையில், சாலையை ஆறுவழியாக விரிவாக்கம் செய்ய, ஆணையம் முடிவு செய்தது. இதற்கான பணிகள், கடந்த ஜனவரி முதல் நடந்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் கால்வாய் கட்டுதல், சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புழல் சந்திப்பு முதல், காவாங்கரை சந்திப்பு வரை, தற்போது பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்கு இடையூறாக, புழல் மத்திய சிறை சுற்றுச்சுவர் உள்ளது. இந்த சுவரை அரைகுறையாக ஆங்காங்கே இடித்து கொடுத்துள்ளனர்.

சிறை வளாகத்திற்குள் மழைநீர் கால்வாய் கட்டும் பணி முடிந்துள்ளது. சுற்றுச்சுவரை அகற்றி, சாலை அமைக்க வேண்டும். இன்னும் சுற்றுச்சுவர் தேவையான அளவில் இடித்து தரப்படவில்லை.

அதே போல், தாழ்வழுத்த மின்கம்பம், உயர் அழுத்த மின்கம்பம் என, இரண்டு வகையான மின் கம்பங்கள் இன்றும் அகற்றப்படாமல் உள்ளன.

இதுகுறித்து பலமுறை அறிவுறுத்தியும் மின் வாரியம் ஒத்துழைக்காமல், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து, மின் கம்பங்களை அகற்றாமலேயே, சாலை விரிவாக்கப் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ள துவங்கியுள்ளது.

மாவட்ட எல்லை இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

மாதவரம் - நல்லுார் இடையிலான வழித்தடத்தில், ஒரு பகுதி சென்னை மாவட்ட எல்லையிலும், மற்றொரு பகுதி திருவள்ளூர் மாவட்ட எல்லையிலும் வருகிறது.

வடகிழக்கு பருவமழை காலங்களில், இந்த சாலையில் ரெட்டேரி முதல் நல்லுார் சுங்கச்சாவடி வரை, பல இடங்களில் நீர் தேங்குவதால், போக்குவரத்து முடங்குவது வாடிக்கை.

இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், மழைநீர் கால்வாய் கட்டும் பணி ஒரு பகுதியில் முடிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள், அரசியல் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே, மழைநீர் வடிகால்வாய் பணியை முடித்துள்ளோம்.

இதற்கான கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. மறுபகுதியில் அரசு துறைக்கு சொந்தமான நிலம் மற்றும் மின் வாரிய கட்டமைப்புகள் இடையூறாக உள்ளன.

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்க பணிகளுக்கு, மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கூறி வருகிறோம்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசுக்கு வருவாய் இழப்பு

மாதவரம் ரவுண்டானா - நல்லுார் வரையிலான, 11 கி.மீ., சாலையை, மாநில நெடுஞ்சாலைத்துறையில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன் வந்துள்ளது.

அதற்கு முன் சாலை விரிவாக்கம், விபத்து பகுதிகள் சீரமைப்பு, மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையை கட்டண சாலையாக பராமரிக்க, மாநில நெடுஞ்சாலை ஆணையமும் முடிவு செய்துள்ளது.

பணிகள் முடியாததால் சாலை ஒப்படைப்பு பணி இழுபறியாக உள்ளது. இதனால், மாநில அரசுக்கான சுங்க கட்டண வருவாயிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us