/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சிலம்ப போட்டி சென்னை வீரர்கள் தகுதி
/
மாநில சிலம்ப போட்டி சென்னை வீரர்கள் தகுதி
ADDED : அக் 24, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கான மண்டல சிலம்ப போட்டி, சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், சென்னையில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
தனிக் கொம்பு, 'தொடு முறை' எனும் சண்டை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆண்கள் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், அனிஷ் 'தொடு முறை' போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆண்கள் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒற்றை யர் தனிக் கொம்பு போட்டியில், சென்னையின் அஷ்வத் தங்கம் வென்றுள்ளார். இவர்கள், அடுத்து நடைபெற உள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

