ADDED : செப் 30, 2026 08:53 PM
சென்னை: காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னையில் இருந்து செங்கோட்டை, போத்தனுார், மானாமதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
★ தாம்பரத்தில் இருந்து, இன்று இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:15 மணிக்கு தென்காசிக்கு செல்லும். செங்கோட்டையில் இருந்து, வரும் 4ம் தேதி மாலை 5:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 4:30 மணிக்கு தாம்பரம் வரும்
★ சென்ட்ரலில் இருந்து, இன்று இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:15 மணிக்கு போத்தனுார் செல்லும். போத்தனுாரில் இருந்து, வரும் 4ம் தேதி மாலை 6:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு சென்னை கடற்கரை வரும்
★ கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து, வரும் 4ம் தேதி இரவு 11:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:30 மணிக்கு எழும்பூர் வரும். எழும்பூரில் இருந்து, வரும் 5ம் தேதி மதியம் 2:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்
★ தாம்பரத்தில் இருந்து, இன்று மாலை 4:30 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 1:20 மணிக்கு மானாமதுரைக்கு செல்லும்.
மானாமதுரையில் இருந்து, வரும் 4ம் தேதி மதியம் 2:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அன்றிரவு 11:45 மணிக்கு தாம்பரம் வரும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில், இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
