/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்மண்டல கிரிக்கெட் போட்டி சென்னை பல்கலை அணி சாதனை
/
தென்மண்டல கிரிக்கெட் போட்டி சென்னை பல்கலை அணி சாதனை
தென்மண்டல கிரிக்கெட் போட்டி சென்னை பல்கலை அணி சாதனை
தென்மண்டல கிரிக்கெட் போட்டி சென்னை பல்கலை அணி சாதனை
ADDED : ஜன 23, 2025 12:09 AM

சென்னை,நாடு முழுதும், 132 பல்கலை பங்கேற்ற, தென்மண்டல பல்கலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், சென்னை பல்கலை அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
அகில இந்திய பல்கலைகள் கூட்டமைப்பு மற்றும் சென்னை பல்கலை இணைந்து, தென்மண்டல பல்கலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியை நடத்தின.
இதில், நாடு முழுதும் இருந்து 132 பல்கலைகள் பங்கேற்றன. சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதிப் போட்டி, சென்னை, ஏ.எம்., ஜெயின் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் சென்னை பல்கலை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த எஸ்.ஆர்.எம்., அணிக்கு சென்னை பல்கலை அணி பந்துவீச்சாளர்கள் சிம்மசொப்பனமாக விளங்கினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், 38.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் வீரர் விவேக், 77 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.
எளிதான இலக்குடன், சென்னை பல்கலை அணி அடுத்து களமிறங்கியது. துவக்கம் முதலே, சென்னை பல்கலை அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், அடிக்கடி பந்து எல்லை கோட்டை தாண்டியது.
இதனால், 23.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து, 174 ரன்களை அடித்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, கோப்பையை வென்றது.
மூன்றாம் இடத்தை, தெலுங்கானா ஜெ.என்.டி.யூ., பல்கலையும், நான்காம் இடத்தை ஜேப்பியார் பல்கலையும் கைப்பற்றின.