/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை குடிநீர் வாரியத்தில் ரூ.1,266 கோடி வருவாய்
/
சென்னை குடிநீர் வாரியத்தில் ரூ.1,266 கோடி வருவாய்
ADDED : ஏப் 02, 2025 11:43 PM
சென்னை
சென்னை குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.15 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.
கடந்த 2023 - 24 நிதியாண்டில், வரி, கட்டணமாக, 1,025 கோடி ரூபாயும், முந்தைய ஆண்டுகளின் நிலுவை, 290 கோடி ரூபாயும் என, மொத்தம் 1,315 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். இதில், 1,064 கோடி ரூபாயும், அபராதம், லாரி குடிநீர் சேர்த்து, 1,108 கோடி ரூபாய் வசூலானது.
கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், வரி, கட்டணமாக, 1,090 கோடி ரூபாய் மற்றும் முந்தைய நிலுவை 513 கோடி ரூபாய் சேர்ந்து, 1,603 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்.
இதில், 1,198 கோடி ரூபாய் மற்றும் அபராதம், லாரி குடிநீர் சேர்த்து, 1,266 கோடி ரூபாய் வசூலானது.
கடந்த நிதியாண்டை விட, 158 கோடி ரூபாய் அதிகமாக வசூலாகி உள்ளது. நிலுவை தொகை, 405 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். இதை நடப்பு நிதியாண்டில் சேர்த்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

