/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை வீராங்கனையர் பளு துாக்குதலில் சாதனை
/
சென்னை வீராங்கனையர் பளு துாக்குதலில் சாதனை
ADDED : அக் 19, 2025 03:30 AM

சென்னை: சர்வதேச பாராலிம்பிக் குழு சார்பில், உலக பாரா பவர்லிப்டிங் போட்டி, எகிப்து நாட்டின் கெய்ரோ மாநகரில் நடந்தது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பாரா பளு துாக்குதல் வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், தமிழகம் சார்பில் மூன்று வீராங்கனையர் மற்றும் ஒரு வீரர் என, நான்கு பேர் பங்கேற்றனர். இதில், 86 கிலோவிற்கு மேற்பட்ட 'லெஜண்ட்' பிரிவில் போட்டியிட்ட, சென்னையின் அருண்மொழி அருணகிரி, 180 கிலோவை துாக்கி, வெண்கலப் பதக்கம் வென்றார்.
அதேபோல், 67 கிலோ எலைட் பிரிவில், சென்னையின் கஸ்துாரி 110 கிலோ துாக்கி, சாதனை படைத்தார். இதற்கு முன், பாரிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் துாக்கிய 106 கிலோ சாதனையை, அவரே முறியடித்து, தனிப்பட்ட சாதனையை படைத்துள்ளார்.
உலக தரவரிசையில் நான்காம் இடத்தையும், 'பெஸ்ட் லிப்ட்' தரவரிசையில் ஏழாம் இடத்தையும் பிடித்து, கஸ்துாரி அசத்தியுள்ளார். இவர், ஆசிய அளவில் 2026ல் நடக்கவுள்ள பாரா காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.