/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீபாவளி மாமூல் வேட்டை ரவுடிகள் இருவருக்கு 'காப்பு'
/
தீபாவளி மாமூல் வேட்டை ரவுடிகள் இருவருக்கு 'காப்பு'
தீபாவளி மாமூல் வேட்டை ரவுடிகள் இருவருக்கு 'காப்பு'
தீபாவளி மாமூல் வேட்டை ரவுடிகள் இருவருக்கு 'காப்பு'
ADDED : அக் 19, 2025 03:28 AM
சென்னை: தீபாவளி கொண்டாட்டத்திற்காக, மாமூல் வசூலித்த ரவுடிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 23. இவர், சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, சிம்சன் நிறுவனம் அருகே உள்ள டீக்கடையில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் பின்னி சாலை வழியாக நடந்து சென்றார். மர்ம நபர் வழிமறித்து, தீபாவளி பெயரில் பணம் கேட்டுள்ளார். ரமேஷ் மறுக்கவே, கத்தியை காட்டி மிரட்டி, 450 ரூபாயை பறித்துச் சென்றார்.
சிந்தாதிரிப்பேட்டை போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட ரிச்சி தெருவைச் சேர்ந்த ஆகாஷ், 20 என்பவரை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம் பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன், மரிய ஜேம்ஸ். இருவரும், பேசின்பாலம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், குப்பை அகற்றும் பணியை, ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணியளவில், பேசின்பாலம் குப்பை கிடங்கில் இருந்த மரியஜேம்சிடம் சென்ற இருவர், தீபாவளி மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர்.
தரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் எனக் கூறியுள்ளனர். இது குறித்து பேசின் பாலம் போலீசார் விசாரித்தனர்.
இதில், மிரட்டல் விடுத்தது, புளியந்தோப்பு காந்தி நகர் 8வது தெருவை சேர்ந்த மணிகண்டன், 33 மற்றும் அவரது கூட்டாளி என்பது தெரிய வந்தது.
மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.