/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.30 கோடி திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
/
ரூ.30 கோடி திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ரூ.30 கோடி திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ரூ.30 கோடி திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ADDED : செப் 25, 2025 12:56 AM

சென்னை, கொளத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட இடங்களில், கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வும், முதல்வருமான ஸ்டாலின் நேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கொளத்துார் 71வது வார்டு, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, 8.20 கோடி ரூபாயில் மேம்படுத்த முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
சீனிவாசன் நகர் 3வது பிரதான சாலையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், ஜி.கே.எம்., காலனியில் பல்நோக்கு மையக் கட்டடம்; திரு.வி.க.நகர் மண்டலத்தின் அனைத்து வார்டு தெருக்களில் எல்.இ.டி., மின்விளக்கு பொருத்தும் பணிகள் என, மொத்தம், 22.14 கோடி ரூபாய்க்கும் அடிக்கல் நாட்டினார்.
மேலும், 69வது வார்டுக்குட்பட்ட ரங்கசாய் தெரு மற்றும் சோமயைா ராஜா தெருவில், 3.96 கோடி ரூபாய்; 2.75 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளை முதல்வர் திறந்து வைத்தார். மற்றும் 64.80 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட மாநகராட்சி விளையாட்டுத் திடலை, முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், 270 பயனாளிகளுக்கு தள்ளுவண்டி, மாவு அரைக்கும் இயந்திரம், திருமணம், கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகையை வழங்கினார்.
தொடர்ந்து, பெரியார் நகரில், 'அனிதா அச்சீவர்ஸ்' அகாடமியில் பயின்ற 480 மாணவ - மாணவியருக்கு லேப்டாப் மற்றும் தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.