/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிவீல் சர்வீஸ் வாலிபால் சென்னை அணிகள் அபாரம்
/
சிவீல் சர்வீஸ் வாலிபால் சென்னை அணிகள் அபாரம்
ADDED : பிப் 15, 2025 08:46 PM

சென்னை:அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டியில், நேற்றைய லீக் ஆட்டங்களில் இருபாலரிலும் சென்னை அணி வெற்றி பெற்றது.
மத்திய சிவில் சர்வீஸ் கலாசார மற்றும் விளையாட்டு வாரியம் சார்பில், அகில இந்திய சிவில் வாலிபால் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் நடக்கின்றன.
இதில், கொச்சின், தமிழகம், குஜராத், மும்பை உட்பட நாடு முழுதும் இருந்து, ஆண்களில் 36 அணிகள், பெண்களில் 22 அணிகள் என, மொத்தம் 58 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியிலும், அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடம்பெற்றுள்ளனர். 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று நடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கான போட்டிகளில், சென்னை அணிகள் வெற்றி பெற்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.