/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
35 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் மக்களிடம் கருத்து கேட்குது சி.எம்.டி.ஏ.,
/
35 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் மக்களிடம் கருத்து கேட்குது சி.எம்.டி.ஏ.,
35 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் மக்களிடம் கருத்து கேட்குது சி.எம்.டி.ஏ.,
35 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் மக்களிடம் கருத்து கேட்குது சி.எம்.டி.ஏ.,
ADDED : ஜூன் 08, 2025 10:31 PM
சென்னை:சென்னை பெருநகரில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் கோரிக்கை அடிப்படையில், 35 இடங்களில் நில வகைப்பாடுகளை மாற்றுவது குறித்து, கருத்து கேட்பு பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.
சென்னை பெருநகரில், 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது முழுமை திட்டத்தின்படி, சர்வே எண் வாரியாக நில வகைப்பாடு வரையறுக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே கட்டுமான திட்டங்கள் அனுமதி பெற முடியும்.
விண்ணப்பம்
பல இடங்களில் நில வகைப்பாடு தவறாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில், நில உரிமையாளர்கள் தனித்தனியாக கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்து வகைபாடு மாற்றம் பெறலாம் என சி.எம்.டி.ஏ., அறிவித்தது. இந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 35 இடங்களில் நில வகைபாடு மாற்ற தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இதில், விவசாயம், தொழில், திறந்தவெளி பொழுதுபோக்கு வகைப்பாட்டில் இருந்து குடியிருப்பு, வணிக பயன்பாட்டுக்கு மாற்ற கோரிக்கை வந்துள்ளது.
மேலும், திருவல்லிக்கேணி திறந்தவெளி பொழுதுபோக்கு வகைப்பாட்டில் இருக்கும் நிலத்தையும், மயிலாப்பூரில் நிறுவன வகைப்பாட்டில் உள்ள நிலத்தையும் குடியிருப்புக்கு மாற்ற, நகர்ப்புற உறைவிட வாரியம் விண்ணப்பித்துள்ளது.
இறுதி
இது தொடர்பாக பொதுமக்கள், 21 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது. கருத்துகளை, mscmda@tn.gov.in என்ற இ - மெயில் முகவரியில் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் கருத்து பெற்று, தொழில்நுட்ப குழு பரிந்துரை அடிப்படையில், சி.எம்.டி.ஏ.,வால் இறுதி முடிவு எடுக்கப்படும்.