/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொகைன், மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல்: 4 வாலிபர்கள் கைது
/
கொகைன், மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல்: 4 வாலிபர்கள் கைது
கொகைன், மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல்: 4 வாலிபர்கள் கைது
கொகைன், மெத்ஆம்பெட்டமைன் பறிமுதல்: 4 வாலிபர்கள் கைது
ADDED : நவ 13, 2024 02:11 AM

மடிப்பாக்கம்:அதிக போதை தரும், 'கொகைன், மெத்தம்பெட்டமைன்' பயன்படுத்திய நான்கு வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மடிப்பாக்கத்தை அடுத்த வேளச்சேரி நியூ காலனி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் பிரெய்னோட், 24. ஆதம்பாக்கம், பெரியார் நகர், 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 24. இருவரும் நண்பர்கள்.
இவர்கள், அம்பத்துாரில் உள்ள, 'காஸ்மோ ஒன் மெடிக்கல் பில்லிங்' என்ற தனியார் நிறுவனத்தில, ஓராண்டாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, திருச்சி, பச்சைமலையைச் சேர்ந்த பிரதீப், 27 அறிமுகமானார். மூவரும் கடந்த 2ம் தேதி, பெங்களூர் சென்று, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம், 10 கிராம் மெத் ஆம்பெட்டமைன் வாங்கி, சென்னை திரும்பினர்.
தகவல் அறிந்த தனிப்படை போலீசார், நேற்று முன்தினம், அஸ்வின் பிரெய்னோட், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வீட்டிற்கு சென்ற போலீசார், இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, மடிப்பாக்கம் பஜார் சாலை, ஆர்ஆர்.சாலுபிரியா குடியிருப்பிற்கு சென்ற போலீசார், அங்கே பதுங்கியிருந்த பிரதீப், வில்லிவாக்கம், பஜனை கோவிலை சேர்ந்த சாபுதீன், 24, ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த 23 கிராம் கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். நான்கு பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.