ADDED : ஏப் 12, 2025 09:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரமணி:சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதி சார்பில், நேற்று, தரமணியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், 60 பேர் பங்கேற்றனர். சமையல் எரிவாயு உயர்வால், குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.

