நள்ளிரவு முதல் முடக்கப்படும் வாக்காளர் பட்டியல்; உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
நள்ளிரவு முதல் முடக்கப்படும் வாக்காளர் பட்டியல்; உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
ADDED : அக் 27, 2025 06:14 PM

சென்னை; தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகள் தொடங்க உள்ள நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை கீழ்க்கண்ட வழிமுறைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பெயர் அதற்கான பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைன் மூலமாகவே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
1.இந்திய தேர்தல் கமிஷனின் https://voters.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
2. பின்னர் அதன் வலதுபுறத்தில் 'Search in Electoral Roll' என்ற பகுதியை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
3. இப்படி ஓபன் செய்யும் போது புதிய டேப் (Tab) ஒன்று ஓபன் ஆகும். அதில், Search by EPIC, Search bu Detail and Search by Mobile என 3 வகைகள் காட்டும். இதில் உங்களுக்கு சவுகரியமான ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவரங்களை கொடுத்தால் உங்களின் பெயர், ஓட்டுச்சாவடி எண், மையம், தொகுதி உள்ளிட்ட விவரங்கள் காட்டும்.
4. Search by EPIC என்ற ஆப்ஷனை கொடுத்தால் உங்களுக்கு மாநிலத்தின் EPIC எண் (வாக்காளர் அடையாள அட்டை எண் தர வேண்டும்) அளிக்க வேண்டும். அப்போது தான் விவரங்களை பெற முடியும்.
5. Search by Details என்று இருக்கும் ஆப்ஷனை நீங்கள் கொடுத்தால் உங்களின் பெயர்/தகப்பனார்/கணவர் பெயர், பிறந்த தேதி, இருப்பிடம் போன்ற தகவல்களை டைப் செய்ய வேண்டும். இந்த தகவல்களை உள்ளீடு செய்தால் உரிய விவரங்கள் கிடைக்கும்.
மேற்கண்ட நடைமுறைகளில் Search by Mobile என்ற ஆப்ஷன் என்பது எளிதான ஒன்று. இதை செலக்ட் செய்தீர்கள் என்றால் வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்தால் ஓடிபி (OTP) வரும். அதை இதில் பதிவிட்டால் உரிய விவரங்களை பெற முடியும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை ஒவ்வொரு வாக்காளரும் சரிபார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பின் படி, வாக்காளர் பட்டியலானது இன்று (28.10.2025) நள்ளிரவு 12 மணியுடன் முடக்கப்படும்.
அதாவது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகள் தொடங்க உள்ள தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கணக்கெடுப்புக்கு முந்தைய நடவடிக்கை தொடங்கும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால், இன்று (28/10/2025) நள்ளிரவு முதல் வாக்காளர் சிறப்பு திருத்தம் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் முடக்கப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும்.
தமிழகத்தில் 2025ம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியலானது ஜன.6ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 ஆகும். மூன்றாம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை 9120.

