தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி பலி


ADDED : நவ 14, 2026 08:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 08:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: மின்சாரம் பாய்ந்து, முதல் மாடியில் இருந்து கீழே விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.

முகப்பேர், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி, 63. கட்டட தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர், இன்று (நவ.,14) மதியம் ஆவடி, ராஜிவ் காந்தி நகர், ஏழாவது தெருவில் உள்ள கட்டடத்தின் முதல் மாடியில், ‘சென்ட்ரிங்’ பணி செய்தார்.

அப்போது மரக்கட்டைகளை துாக்கியபோது, எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் உரசியது. இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து, முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us