/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொடர்ச்சி - பிளஸ் 1 பொதுத்தேர்வில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி
/
தொடர்ச்சி - பிளஸ் 1 பொதுத்தேர்வில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி
தொடர்ச்சி - பிளஸ் 1 பொதுத்தேர்வில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி
தொடர்ச்சி - பிளஸ் 1 பொதுத்தேர்வில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 12:27 AM
சென்னை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 பொதுத்தேர்வை, 2,366 மாணவர்கள்; 2,995 மாணவியர் என, 5,361 மாணவர்கள் எழுதினர்.
இதில், 1,783 மாணவர்கள்; 2,557 மாணவியர் என, 4,340 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, 75.36 சதவீத மாணவர்கள்; 85.38 சதவீத மாணவியர் என, 81 சதவீதம் மொத்த தேர்ச்சியாக உள்ளது. கடந்தாண்டைவிட, ஒரு சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.
மதிப்பெண் அடிப்படையில், 9 மாணவர்கள் 551க்கு 600 மதிப்பெண்கள்; 68 மாணவர்கள் 501ல் இருந்து 550 மதிப்பெண்கள்; 249 மாணவர்கள் 451ல் இருந்து 500 வரை மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், கணினி அறிவியலில் 1; கணினி பயன்பாடுகள், 1; வணிகவியல் நான்கு என, ஆறு மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். லாய்ட்ஸ் சாலை பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது.