/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.60 கோடியில் கூவம் தரைப்பாலம் சீரமைப்பு பணியில் மாநகராட்சி கவனம்
/
ரூ.1.60 கோடியில் கூவம் தரைப்பாலம் சீரமைப்பு பணியில் மாநகராட்சி கவனம்
ரூ.1.60 கோடியில் கூவம் தரைப்பாலம் சீரமைப்பு பணியில் மாநகராட்சி கவனம்
ரூ.1.60 கோடியில் கூவம் தரைப்பாலம் சீரமைப்பு பணியில் மாநகராட்சி கவனம்
ADDED : ஜன 31, 2025 12:16 AM

அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டு, அரும்பாக்கம் அருகில், சூளைமேடு, மாதா கோவில் தெருவில் உள்ளது.
இந்த தெருவைச் சுற்றி, எம்.எச்., காலனி, கலெக்டர் காலனி உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன; 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள ரயில்வே காலனி 3வது தெரு - மாதா கோவில் தெரு மற்றும் அண்ணா நெடும்பாதையை இணைக்கும் பகுதியில், விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது. இதில் பொதுமக்கள் கடப்பதற்காக 4 அடி அகலம் உடைய பழைய தரைப்பாலம் உள்ளது.
இப்பாலத்தின் மீது சென்று, பெரியார் பாதை வழியாக சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணா நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு, பலரும் செல்கின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பதால், தரைப்பாலத்தின் இருபுற பக்கவாட்டு தடுப்பு சுவரும் இடிந்து விழுந்தது.
பல கட்ட போராட்டத்திற்கு பின், அ.தி.மு.க., ஆட்சியில் முதலில், 1.03 கோடி ரூபாயில் புதிய தரைப்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்தால், பணிகள் நிலுவையில் விடப்பட்டன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க 1.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இரு ஆண்டுகளுக்கு முன், பூமி பூஜை மீண்டும் போடப்பட்டது.
இந்த பணிகளும் நிலுவையில் விடப்பட்டதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, மூன்றாவது முறையாக மூலதன நிதியில் இருந்து, 1.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடந்தாண்டு ஆக., 12ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தரைப்பாலம் சீரமைக்க, அடிக்கல் நாட்டினார்.
அப்போது, கண்துடைப்புக்கு, தடுப்பு சுவர் மட்டும் இடிக்கப்பட்டது. பின் மீண்டும் எந்த பணிகளும் துவங்காமல் நிலுவையில் போடப்பட்டன. இதுகுறித்தும் நம் நாளிழிதலில் செய்தி வெளியானது.
இந்நிலையில், தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியை மாநகராட்சி துவங்கியுள்ளதால், பகுதிவாசிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

