/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கிடங்கில் சிக்கிய மாடு மீட்பு
/
குப்பை கிடங்கில் சிக்கிய மாடு மீட்பு
ADDED : டிச 24, 2024 11:55 PM

கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, பெருமாட்டுநல்லுார் சுடுகாடு அருகிலுள்ள காலி இடத்தில் கொட்டப்படுவது வழக்கம்.
அந்த குப்பையில் தற்போது பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கி, குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் நேற்று, இரை தேடி குப்பையை கிளறிய மாடு ஒன்று, அந்த குட்டையில் சிக்கி, வெளியேற முடியாமல் தவித்தது.
இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள், மாட்டை மீட்க முயற்சித்த போது, அது சகதியில் பலமாக சிக்கிக் கொண்டதால், அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து, மறைமலைநகர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய மேலாளர் கார்த்திகேயன் தலைமையிலான ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள், சேற்றில் சிக்கிய மாட்டை, கயிறு கட்டி மீட்டனர்.