ADDED : நவ 21, 2026 09:08 PM
அ நிறம் | அளவு
திருச்சியைச் சேர்ந்த முகமது ஹூசைன், 46, என்பவர், நவ., 8ம் தேதி, 46 கிலோ வெள்ளிப் பொருட்களுடன் பெருங்களத்துார் வந்தார். பேருந்து நிலையத்தில் இறங்கிய அவரை, மர்ம நபர்கள் தலையில் தாக்கி, வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்தனர்.
பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து ஏற்கனவே ஆறு பேரை கைது செய்தனர்; இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த எண்ணுாரைச் சேர்ந்த கரண், 24, ஜோதீஸ்வரன், 24, ஆகிய இருவரையும் இன்று (நவ.,21) கைது செய்தனர்.
