ADDED : ஆக 02, 2026 03:31 AM

காதல் ஜோடி தஞ்சம் ஐஸ்ஹவுஸ்: சென்னையைச் சேர்ந்த இலியாஸ், 31, உடன் பணிபுரியும் காதலி அபூர்வ லட்சுமியை, திருவல்லிக்கேணியில் நேற்று காலை பதிவு திருமணம் செய்தார்.
பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு கோரி ஐஸ்ஹவுஸ் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
தவறவிட்ட நகைகள் மீட்பு சென்னை: நாகர்கோவில் - எழும்பூர் வந்தே பாரத் ரயிலில், நேற்று முன்தினம் பயணித்த ஸ்ரீபெரும் புதுாரைச் சேர்ந்த பாலமுருகன் 3 சவரன் தாலி செயினை விழுப்புரத்தில் தவறிவிட்டார்.
எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரித்து, அங்குள்ள மேலாளரிடம் பாதுகாப்பாக இருந்த பையை மீட்டு, உரிமையாள ரிடம் ஒப்படைத்தனர்.
பூங்காவில் விளக்கு திருட்டு கோயம்பேடு: கோயம்பேடு, பசுமை பூங்காவின் சுற்றுச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த அலுமினிய தகடுகளுடன் கூடிய எல்.இ.டி., விளக்குகளை திருடிய, கோயம்பேட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுனில், 45, என்பவரை, கோயம்பேடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
10 போன்கள் பறிமுதல் நீலாங்கரை: பாலவாக்கம் வி.ஜி.பி., அவென்யூவில் கட்டுமான பணியிடத்தில், வடமாநில தொழிலாளர்களின் ஐந்து மொபைல் போன்களை திருடிய முகமது ஆஷிக், 28, கைது செய்யப்பட்டார்.
அவரிடம் ஐந்து போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன
புளியந்தோப்பில் மொபைல் போன் திருடன் கீர்த்திவாசன், 20, கைதாகி, ஐந்து போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
