தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : அக் 22, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 03:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணை படம் பிடித்து மிரட்டியவர் கைது

சென்னை: மயிலாப்பூரைச் சேர்ந்த 41 வயது பெண், கடந்த 20ம் தேதி வடக்கு மாட வீதியில், ஹோட்டல் அருகே நின்றிருந்தார். அப்போது, மயிலாப்பூர் மத்தளநாராயணன் தெருவைச் சேர்ந்த ஆனந்த் சவ்பால், 20, என்பவர், அப்பெண்ணை மொபைல் போனில் படம் பிடித்தார். பெண் கேட்டபோது, அவரை மிரட்டி தாக்கினார். விசாரித்த மயிலாப்பூர் போலீசார், ஆனந்த் சவ்பாலை நேற்று கைது செய்தனர்.

உடன் வாழ்ந்த நபர் மீது பெண் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 38 வயது பெண் நேற்று அளித்த புகாரில், ‘நான் ஹோட்டல் மேனேஜ்மெட் படித்துவிட்டு, சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறேன். கணவரை பிரிந்து, 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். உடன் பணிபுரிந்த ஜெயசூர்யா என்பவர், எனக்கு தாலி கட்டி, கணவர் போல வாழ்ந்து வந்தார். தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து, என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபரை கடத்தி வழிப்பறி: 4 பேர் சிக்கினர்

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில், கடந்த 14ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற அஜய், 21, என்பவரை ஆட்டோவில் கடத்திய கும்பல், 9,500 ரூபாய், மொபைல் போனை பறித்து சென்றது. பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து, குரோம்பேட்டையைச் சேர்ந்த சையத் அபுதாகிர் என்ற அபு, 18, பிரகாஷ் ராஜ், 22, பூபாலன், 23, நாகல்கேணியைச் சேர்ந்த சஞ்சய், 21, ஆகிய நால்வரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

மனைவி கொலை செய்ய முயன்றவருக்கு ‘காப்பு’

அமைந்தகரை: அமைந்தகரை, ஷெனாய் நகரைச் சேர்ந்த அரவிந்த்குமார், 30, மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறார். இவர், அடிக்கடி மது அருந்தி வந்து, மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 19ம் தேதி ஏற்பட்ட தகராறில், மனைவியின் கழுத்தை நெரித்து, கையால் தாக்கி கீழே தள்ளியுள்ளார். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பெண், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கீழ்ப்பாக்கம் போலீசார், அரவிந்த்குமாரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருட்டை தடுக்க முயன்றவரை தாக்கியோர் கைது

கொடுங்கையூர்: திருவொற்றியூர், ஜோதி நகர் 2வது தெருவில் வசிக்கும் ஒடிஷாவைச் சேர்ந்த சிக்கந்த் மாலிக், 47, கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை 6:00 மணியளவில், அங்கு இரும்புப் பொருட்களைத் திருட முயன்ற இருவரைத் தடுத்ததால், ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டிலால் அவரை தாக்கி தப்பினர். கொடுங்கையூர் போலீசார் விசாரித்து, ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த ஜோன் மணி, 29, மணிகண்டன், 22, ஆகியோரை கைது செய்தனர்.

கபடியில் முன்விரோதம்: வாலிபர் மீது கொலைவெறி தாக்கு

நீலாங்கரை: கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ்ராஜ், 22, திருவான்மியூரைச் சேர்ந்த பாலாஜி, 25, ஆகியோருக்கு, கடந்த மாதம் கபடி விளையாட்டில் ஏற்பட்ட தகராறால், முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் கொட்டிவாக்கம் கடற்கரைக்கு சென்ற சதீஷ்ராஜை, பாலாஜி உள்ளிட்ட ஐந்து பேர் வழிமறித்து, கத்தியால் குத்தியும் கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். விசாரித்த நீலாங்கரை போலீசார், பாலாஜி, 25, ஆனந்த், 22, ஜீவானந்தம், 20, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். இருவரைத் தேடி வருகின்றனர்.

பெண்களை தாக்கிய வாலிபர்கள் இருவர் கைது

கே.கே.நகர்: கே.கே.நகரைச் சேர்ந்த அஜித்குமார், 25, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பாக்யராஜ், 26, ஆகியோர், கே.கே.நகர், ராணி அண்ணா நகர் சங்க கட்டடம் அருகே, வெளிமாநில நபரிடம் நேற்று முன்தினம் தகராறு செய்தனர். இதை அப்பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரி, 33, அவரது சகோதரி தட்டிக்கேட்டனர். அவர்களை இருவரும் தாக்கினர். காயமடைந்த மோகனசுந்தரி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின்படி, கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us