தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : அக் 26, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாகன சோதனையில் சிக்கிய ஸ்கூட்டர் திருடன்

கொடுங்கையூர்: கொடுங்கையூர், சீதாராமன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 42. கடந்த 19ம் தேதி இவரது ‘ஹோண்டா அக்டிவா’ ஸ்கூட்டர் திருட்டு போனது. கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் ஸ்கூட்டரை திருடிய தமீம் அன்சாரி, 40 என்பவர், கொளத்துார் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், ஸ்கூட்டரை மீட்டனர்.

வாலிபரை தாக்கி ஸ்கூட்டர் பறித்தவர் கைது

கொடுங்கையூர்: புரசைவாக்கம், பொன்னன் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 32; மின்வாரிய ஒப்பந்த பணியாளர். கடந்த 25ம் தேதி கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில் வழிமறிந்த மர்ம நபர், கமலக்கண்ணனை தாக்கி, அவரது ஹோண்டா டியோ ஸ்கூட்டரை பறித்துச் சென்றார். கொடுங்கையூர் போலீசாரின் விசாரணையில், கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்., நகரசை் சேர்ந்த அரவிந்தன், 27 என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து, ஸ்கூட்டர் மீட்கப்பட்டது.

மொபைல் போனை பறித்த சிறுவர்கள் சிக்கினர்

பெரம்பூர்: பெரம்பூர், வாசன் தெருவைச் சேர்ந்தவர் நளினி, 28; திரு.வி.க., நகர் மண்டல சுகாதார ஆய்வாளர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மூவர் நளினியின் மொபைல் போனை பறித்துச் சென்றனர். விசாரித்த செம்பியம் போலீசார், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட புளியந்தோப்பு மற்றும் சூளை பகுதிகளைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்தனர்.

மேளம் அடிக்கும் தொழிலாளர்களை வெட்டியோருக்கு வலை

ஓட்டேரி: ஓட்டேரி சேமாத்தம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு தேர்த்திருவிழா நடந்தது.

அங்கு, அயனாவரத்தைச் சேர்ந்தவர் மேளம் அடிக்கும் தொழிலாளர்களான மகாதேவன், 32. பெரம்பூரைச் சேர்ந்த ஜெயபால், 34, மேளம் அடித்து கொண்டிருந்தனர். அப்போது, மதுபோதையில் வந்த வாலிபர்கள், நடனத்திற்கு ஏற்ற மேளம் அடிக்கும்படி தகராறு செய்தனர். இதில் தகராறு ஏற்படவே, மது போதையில் இருந்த வாலிபர்கள் கத்தியால் மகாதேவனையும், ஜெயபாலையும் வெட்டினர். அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரித்த ஓட்டேரி போலீசார், அராஜகத்தில் ஈடுபட்ட , கமல், பாலாஜி உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us