ADDED : அக் 28, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
இருசக்கர வாகனம் திருடியவர் கைது
கோடம்பாக்கம்: சூளைமேடு, சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் அனந்தராமன், 43; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 25ம் தேதி மதியம், கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலை அருகே பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, பைக் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, கோடம்பாக்கம் போலீசார், அயப்பாக்கத்தைச் சேர்ந்த செபஸ்டின் என்ற சூர்யா, 45, என்பவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
