UPDATED : அக் 28, 2026 04:06 PM
ADDED : அக் 28, 2026 03:59 PM
அ நிறம் | அளவு
கே.கே.நகர்: மேற்கு மாம்பலம், புதுத்தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபீக், 52; தனியார் நிறுவனத்தில் பொருட்கள் இருப்பு பராமரிப்பாளர்.
நேற்று (அக்.,27) காலை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த இவரிடம் இருந்து மொபைல் போனை பறித்து தப்பிய ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெகன், 24, என்பவரை இன்று (அக்.,28) கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
