ADDED : அக் 28, 2026 04:03 PM
அ நிறம் | அளவு
வானகரம் ஊராட்சி, போரூர் கார்டன் பேஸ் – 2 பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பூங்கா இடத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது.
இதை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகைகளை அகற்றக்கோரி, கேசவன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், வில்லிவாக்கம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வசுந்தரி தலைமையிலான அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
