தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : அக் 30, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காதலன் ஏமாற்றியதால் பெண் தற்கொலை முயற்சி

ஓட்டேரி: ஓட்டேரியைச் சேர்ந்த 18 வயது பெண்ணின் பெற்றோர், சிறுவயதிலேயே பிரிந்து சென்றதால், தம்பியுடன் பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார். உறவினரான கோகுல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்ததுடன், நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில், கோகுல் திருமணம் செய்ய மறுத்ததால் அதிர்ச்சியடைந்த பெண், புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு வீட்டில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

துாய்மை பணியாளர் மர்ம சாவு

புளியந்தோப்பு: சூளை பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு, 48, சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர். மது பழக்கமுடைய இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வெளியில் சென்று திரும்பவில்லை. உறவினர்கள் தேடிய நிலையில், நேற்று காலை புளியந்தோப்பு, பழைய ஆடு தொட்டி தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில், வாயில் ரத்தம் வழிந்து இறந்து கிடந்தார். பேசின்பாலம் போலீசார் உடலை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பெண்ணை சீண்டிய கொத்தனாருக்கு ‘கம்பி’

எம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 46 வயது பெண், ராமாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் பணி செய்கிறார். கடந்த 28ம் தேதி இரவு வேலை முடிந்து மினி பஸ்சில் வீட்டிற்குச் சென்றபோது, நெல்லை ஸ்டோர்ஸ் பஸ் நிறுத்தத்தில் ஏறிய நபர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பெண் சத்தமிட்டதால், பயணியர் உதவியுடன் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த கொத்தனார் செல்வம், 55, என்பவரை கைது செய்த எம்.ஜி.ஆர்.நகர் போலீசார், நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்ற பெண் கைது

ஓட்டேரி: ஓட்டேரி, டோபி கானா ஹவுசிங் போர்டு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஷா, 30, கிஷோர்குமார், 28, ஆகிய இருவரை ஓட்டேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஓட்டேரி, பெரம்பூர் பேரக்ஸ் சாலையைச் சேர்ந்த காட்டு ரோஜா, 65, என்பவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us