ADDED : நவ 15, 2026 04:54 PM

அ நிறம் | அளவு
பணம் பறிப்பில் ஈடுபட்ட ரவுடி கைது
கொளத்துார்: கொளத்துார், தெற்கு மாட வீதியில், மதுபோதையில் பொதுமக்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட ரவுடியான நரேஷ்குமார், 23, என்பவரை கொளத்தூர் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
ராஜமங்கலம்: கொளத்துார், மக்காரம் தோட்டம், பெருமாள் கோவில் தெருவில், நேற்று முன்தினம் இரவு மது விற்பனையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் தட்சிணாமூர்த்தி, 56, என்பவரை கைது செய்த ராஜமங்கலம் போலீசார், 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
