தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


ADDED : நவ 16, 2026 09:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 09:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வழிப்பறி திருடர்கள் இருவர் சிக்கினர்

சென்னை: பல்லவன் சாலை, சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர், 38. இவர், நேற்று முன்தினம், வாலாஜா சாலையில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி, மொபைல் போன் மற்றும் 500 ரூபாயை பறித்து சென்றனர். திருவல்லிக்கேணி போலீசாரின் விசாரணையில், கண்ணகி நகர் சுனாமி காலனியைச் சேர்ந்த தாமஸ் நவீன், 20, புதுப்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 20, என்பது தெரிய வந்தது. நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: இருவர் கைது

விருகம்பாக்கம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் சேமங்கலத்தைச் சேர்ந்தவர் முருகன், 44; கட்டடத் தொழிலாளி. விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 14ம் தேதி இரவு மது அருந்தினார். அப்போது, தண்ணீர் பாட்டில் வாங்கி தர மறுத்த தகராறில், மூவர் அவரை மது பாட்டில்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விருகம்பாக்கம் போலீசார் நேற்று ராஜேஷ், 24, சந்தோஷ், 25, ஆகிய இருவரை கைது செய்தனர். ராஜேஷ் மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளன.

மூதாட்டியிடம் செயின் பறித்தவருக்கு வலை

பல்லாவரம்: அனகாபுத்துார் பஜார் தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே வசிப்பவர் வரலட்சுமி, 72. நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தபோது, 38 வயது நபர் கத்தியைக் காட்டி மிரட்டி, மூன்றரை சவரன் செயினைப் பறித்துச் சென்றார். ஏற்கனவே வீட்டில் வாடகைக்கு இருந்த நபர் மீது சந்தேகம் இருப்பதாக வரலட்சுமி தெரிவித்தார். சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்டவரைத் தேடி வருகின்றனர்.

தொழிலாளியிடம் போன் பறித்த மூவருக்கு ‘கம்பி’

வடக்கு கடற்கரை: சென்னை லைட் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரஞ்சித், 35. பிராட்வே சாலையில் மொபைல் போனில் பேசியபடி சென்றபோது, மூன்று நபர்கள் அவரைத் தாக்கி மொபைல் போனை பறித்துச் சென்றனர். வடக்கு கடற்கரை போலீசார் விசாரித்து, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளத்தைச் சேர்ந்த வெங்கல ராஜா, 25, ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது சமியுல்லா, 20, தி.நகரைச் சேர்ந்த தினேஷ், 21, ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் லாட்டரி விற்ற மூவருக்கு ‘காப்பு’

விருகம்பாக்கம்: விருகம்பாக்கம், சாலிகிராமம் பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அண்ணாநகரைச் சேர்ந்த கணேசன், 57, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன், 37, புதுக்கோட்டையைச் சேர்ந்த வினோத், 32, ஆகியோரை கைது செய்த விருகம்பாக்கம் போலீசார், இரண்டு மொபைல் போன்கள், 2,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

‘காப்பர்’ கம்பி திருடிய சிறுவர்களுக்கு ‘காப்பு’

பெரம்பூர்: பெரம்பூர், பல்லவன் சாலை பொன்னுசாமி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் இம்ரான் ஷெரீப், 40. கடந்த 11ம் தேதி, இவரது குடியிருப்பைச் சேர்ந்த இம்ரான் ஷெரீப் உட்பட ஏழு பேரின் வீடுகளில் இருந்து, ‘ஏசி’ மிஷின்களுக்கான காப்பர் கம்பிகள் திருடப்பட்டிருந்தன. இது குறித்து விசாரித்த திரு.வி.க., நகர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட பெரம்பூர், ஜானகிராமன் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவர்கள் இருவரை நேற்று கைது செய்து, சிறார் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

‘குட்கா’ விற்ற பெண் உட்பட இருவர் சிக்கினர்

புளியந்தோப்பு: காந்தி நகர் முதல் தெருவில் குட்கா, மாவா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்களை விற்ற வழக்கில், அப்பகுதியைச் சேர்ந்த சுதா, 37, கே.பி.பார்க் குடியிருப்பைச் சேர்ந்த சுதர்சன், 26 ஆகியோரை, பேசின்பாலம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மது போதையில் ரவுடிசத்தில் ஈடுபட்டோர் கைது

பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை அருகே மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்ட வியாசர்பாடி சந்திரசேகரன் தெருவைச் சேர்ந்த பிரசாந்த், 33, விக்னேஷ், 26, பரணிகுமார், 26, சக்திவேல், 24 ஆகியோரை செம்பியம் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

* வியாசர்பாடி சி.கல்யாணபுரம் கூட்ஷெட் பகுதியில் மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்த புகாரில், உதயசூரியன் நகரைச் சேர்ந்த ஜோசப், 19, சஞ்சய், 21 ஆகியோரை, வியாசர்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

வியாபாரிகளிடம் மாமூல் வசூலித்தவருக்கு ‘கம்பி’

எம்.கே.பி., நகர்: வியாசர்பாடி ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலித்த, வியாசர்பாடி முல்லை நகரைச் சேர்ந்த விமல்ராஜ், 26 என்ற சரித்திர பதிவேடு ரவுடியை எம்.கே.பி., நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us