
இடறி விழுந்து 6 வயது சிறுமி பலி
மாங்காடு: மாங்காடு அருகே மலையம்பாக்கம், சக்தி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது மகள் ஷாலினி, 6. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே தெருவில் விளையாடியபோது, கால் தடுக்கி இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
தலையில் பலத்த காயமடைந்த சிறுமியை, பெற்றோர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
பணியாளரை தாக்கியவருக்கு 'காப்பு'
சென்னை: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமி, 43. இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் காலை எழும்பூர் காந்தி இர்வின் பாலம் - ஈவெ.ரா., சாலை சந்திப்பு அருகே பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக நடந்து சென்றவரை ஓரமாக போகும்படி லட்சுமி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர் ஹிந்தியில் தகாத வார்த்தையால் பேசி, லட்சுமியை தாக்கி தப்பினார். இது குறித்து விசாரித்த எழும்பூர் போலீசார், காஷ்மீரைச் சேர்ந்த ரவீந்தர் சிங், 25, என்பவரை கைது செய்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் 'போக்சோ'வில் கைது
நொளம்பூர்: திருமங்கலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான, 19 வயது வாலிபரும், காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, தகராறு ஏற்பட்டு பிரிந்தனர்.
இந்நிலையில், சிறுமி பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை சந்தித்து, தன்னிடம் பேச வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்த புகாரை அடுத்து, திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
தலைமறைவு குற்றவாளி பிடிபட்டார்
பெரம்பூர்: கடந்த 2011ம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில், மாதவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 32 என்பவரை செம் பியம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். 'ஏ கிரேடு' ரவுடியான இவர், ஜாமினில் வெளியே வந்த பின், வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்ற பிடியாணையை அடுத் து, நேற்று அவர் சிக்கினார். போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
ஐஸ்ஹவுசில் சிக்கிய போதை மாத்திரை
ஐஸ்ஹவுஸ்: ஐஸ்ஹவுஸ், ராம்நகர் 8வது தெருவில், நேற்று காலை போலீசார் க ண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது, 40 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. வி சாரணையில், திருவல்லிக்கேணி, வி.ஆர்.,பிள்ளை தெருவைச் சேர்ந்த அபிஷேக், 21, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 40 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
ஆட்டோ மோதி எஸ்.எஸ்.ஐ., காயம்
கோயம்பேடு: வானகரம், போரூர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் துரை கண்ணன், 50. இவர், திருமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருகிறார். இவர், தன் 'ஹோண்டா சைன்' பைக்கில் நேற்று காலை பணிக் கு சென்றார்.
கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ரோகிணி திரையரங்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த ஆட்டோ அவரது பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த துரை கண்ணனின் வலது கையின் சுண்டு விரலில் எ லும்பு முறிவு ஏற்பட்டது. இது குறித்த புகாரில், கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வடபழனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு, 46, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

