ADDED : ஜூலை 21, 2026 01:15 AM
தேனாம்பேட்டையைச் சேர்ந்த கலைமணி, 45, ஆரோக்கியமேரி என்பவரிடம் இருந்து, பைக் மெக்கானிக் கடையை வாங்கி, எம்.கே., ராதா நகரில் நடத்தி வருகிறார். கடையை காலி செய்ய சொல்லி, கலைமணியை தாக்கிய ஆரோக்கியமேரியின் பேரன் செந்தில் குமாரை, 47, போலீசார் நேற்று கைது செய்தனர்.
வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஒரு பழச்சாறு கடைக்கு நேற்று முன்தினம் சென்ற தமிழரசன், 36, மற்றும் சந்துசிங், 34, ஆகியோர், பன்னீர் பப்ஸ் கேட்டுள்ளனர். இல்லை என்றதும், கடை ஊழியர்களான இரு பெண்களை ஆபாசமாக பேசி தாக்கினர். நுங்கம்பாக்கம் போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர்.
ரெட்டேரி பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று அதிகாலை 3:00 மணியளவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். ராஜமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
குன்றத்துார் முருகன் கோவில் பின்புறம் உள்ள சாலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், 25, என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் ஒரு கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
